கைப்பேசி
நான் படித்து கொண்டு
இருப்பது வனத்தை சார்ந்தப் படிப்பாக இருந்தாலும்,
எனக்கு கைப்பேசி என்னும் மின்னனுப்பொருளின் மீது ஒரு மோகம். ஏனென்றால் தற்காலத்தில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்
அல்ல, அதன் விளைவுகளை உணர்ந்ததினால் ஏற்பட்டது அந்த மோகம். இன்றைய உலகில் இன்றியமையாத
பொருளாக விளங்கும் இதனால் விளைவா? என்று ஆச்சரியப்படுவீர்கள்.ஆம் உள்ளது.இதோ என் கவலையை
கவிதை நடையில்,
உள்ளங்கை அளவுள்ள கைப்பேசியே…!
காலத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் நீ
உலகின் கடவுள் ஆனாய்…!
உள்ளங்கை அளவுள்ள என் சிட்டுக்குருவிகள்
என்ன செய்தன உன்னை…
கடவுள் ஆன பிறகு ஏன் அதற்கு
பரிசளித்தாய் கல்லறையை….
உன் கதிர் அலைகள் கருவருத்தன
அந்த ஐந்தறிவின் உயிரை……..
உன்னால் பாதிப்பு அடைவது அவைகள் மட்டுமல்ல
இந்த ஆறறிவு உயிரும் தான்…
மானிடா,
இன்று அதற்க்காக நான் எழுதுகிறேன்
நாளை நமக்காக யார் எழுதுவார்கள்…
விழித்துக்கொள்….
No comments:
Post a Comment