Friday, 19 April 2013

அன்னை.... ..


அன்னை.... ..


உன்னால் நான் பிறந்தேன்;
உன்னால் நான் வளர்ந்தேன்;
உன்னால் நான் வாழ்ந்தேன்;
உன்னால் நான் உயர்ந்தேன்.

உன் நினைவுகளே வாழ்வின் ஆதாரம்;
உன் எண்ணங்களே வாழ்க்கையின் இயக்கம்.

நீ இன்று இல்லாததால்
வாழ்க்கை ஒன்றுமில்லாது போனது.

என் வருகைக்காக மரணம்
தன் வாசலைத் திறக்கும் வரை

மனதில் நிறைந்திருக்கும் உன் ஒளி
என்றும் காட்டட்டும் நல்வழி.

No comments:

Post a Comment