மண்
பரிசோதனை
விவசாயிகள்
தங்களின் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி பயிரிட்டு அறுவடை நேரத்தில் உழைப்புக்கு
உண்டான ஊதியம் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். இதற்கு காரணம் மண்ணின் தன்மையை பலர் அறியாமல்
இருப்பதும், அந்த மண்ணின் வளத்துக்கேற்றபடி பயிரிடாததுமே காரணம். விவசாயத்தில் மண்ணிற்கு
முக்கியப் பணி செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பது. பயிருக்கு 16 வகையான
ஊட்டச் சத்துக்கள் தேவை. அதில் மண்ணில் 13 வகையான ஊட்டச்சத்து பயிருக்கு கிடைக்கிறது.
மண் பரிசோதனையின் மூலம் எந்தெந்த சத்துகள் எந்த அளவில் மண்ணில் உள்ளது. சத்துக்கள்
குறைபாடுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வது குறித்தும் அறிந்து கொள்ள மண் பரிசோதனை
அவசியமாகிறது.
குறிப்பாக தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை கணக்கிட்டு சமச்சீர் உரமளிக்க வேண்டும். நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, கால்சியம், மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம், சல்பர், குளோரின், மக்னீசியம் ஆகியவற்றின் அளவை அறிந்து அதற்கேற்றார் போல் உரமிட்டு மண் வளத்தைப் பாதுகாக்க முடியும். மேலும் மண் பரிசோதனை மூலம் களர்உலர் அமிலத் தன்மையை அறிந்து அதை நீக்குதல், சிறந்த முறையில் உரமிட்டு உரச்செலவை குறைத்தல் போன்றவையும் மண் பரிசோதனையின் முக்கிய அம்சங்களாகும்.
மண் மாதிரி எடுக்கும் முறை:
பயிர் அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்யும் முன்பும் மண் மாதிரி எடுக்க வேண்டும்.
ஒரு நிலத்தில் மண் வேறு வேறாக இருந்தால் தனித்தனியாக மாதிரி எடுக்க வேண்டும். மேட்டுப்பகுதி, பள்ளப்பகுதி ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து மண் மாதிரி எடுக்க வேண்டும்.
1 ஏக்கருக்கு 10 இடங்களில் மண் சேகரிப்பு செய்ய வேண்டும். சேகரித்த மண்ணை சுத்தமான கோணியில் கொட்டி சம பாகமாக கலந்து அதிலிருந்து அரை கிலோ மண்ணை எடுத்து வர வேண்டும். மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்தி மாதிரிக்கு எடுக்க வேண்டும். மண் வெட்டிக்கு பதிலாக குச்சியை பயன்படுத்தி மண்ணை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment