வனம் காப்போம்
மனித இனம் வாழ வனம் அடிப்படை தேவை.வனம் செழித்தால் நாடும்,மக்களின் வாழ்வும் செழிப்புரும்.நம் நாட்டிற்கு தேவையான வனம் 30 சதம்,ஆனால் இருப்பதோ 7 சதம் தான். தேவையான மரங்கள் 54கோடிக்கு மேல் இப்படியிருக்க, இருப்பதும் வனக்கொள்ளையால் பறிபோவது மனதை வதைக்கிறது.
உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு பகுதிகளில் மேற்குதொடர்சி மலைகளும் ஒன்றாகும்.இதில் 5000 வகை பூக்கும் தாவரங்களும்,139 வகை பாலுட்டிகளும்,508 வகை பறவைகளும் 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.இம் மலைதொட்ர் மராட்டியம்,குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் வழியாக சென்று கன்னியாகுமாரியில் முடிகிறது.பரப்பள்வு 60,000 ச.கி.மீ.சுமார் 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகள் தனிதன்மை வாய்ந்த புவியல் அமைப்பாகும்.கோதவாரி,கிருஷ்ணா,காவிரி மற்றும் பல சிறு ஆறுகளின் பிறப்பிடமாகும்.
மேற்கு மலைதொடாரின் வளமான பகுதி சத்தியமங்களதின் வனபகுதியாகும்.இதில் புலி,யானை உள்ளிட்ட அபூர்வ வகை மான்னினங்கள் வசிக்கின்றன.முக்கியமாக நம்க்கு ஆக்சிஜன் தொழிற்சாலையாக்வும் உள்ளது. இவ் வனமானது தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதை எதிர்த்து சிலர் போரட்டங்கள் முற்படுகின்றன மேலும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றன, அவற்றைத் தடுத்து நாம் நம் வனத்தையும் வனவிலங்குகளையும் காப்போம் என உறுதிகொள்வோம்...
”வனவளமே நிலையான வளம்”
No comments:
Post a Comment