வன
உயிர்களை அழித்தல்
வன உயிர் என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மனிதனின் நன்மைக்காகக் காட்டுத் தாவரம் மற்றும் விலங்கினங்களை அழித்து விடுகிறார்கள்.இது உலகம் முழுவதும் பலமுறை நடந்துள்ளது. இது சுற்றுப்புறத்திற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வன உயிர்களை அனைத்து சூழ்நிலை மண்டலங்களிலும் காணலாம். பாலைவனங்கள், மழைக்காடுகள், சமவெளிகள் போன்ற இடங்களில் மட்டுமன்றி மிகவும் வளர்ச்சியுற்ற நகர்ப்புறங்களில் கூடத் தனித்துவமான வன உயிர் வடிவங்கள் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் வன உயிர்கள் மனித நடவடிக்கைகளால் தாக்கப்படுகின்றன.
காட்டுயிர்களைச் அழிப்பது என்பது பலஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் வெளியேறிய காலத்தில் இருந்தே மனிதனின் குணவியல்பாக இருந்துவருகிறது. உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களின் அழிவு விகிதம் கடந்த சில நூறு ஆண்டுகளாக மிகவும் அதிகமாக இருக்கிறது. தாவரங்களை விட விலங்குகளே அதிகம் அழிகின்றன.
வன உயிரினங்கள் இப்பொழுதும் அழிந்து கொண்டு வருகிறது. அதற்கு
காரணம் வன வாழ்விடங்களான அதாவது காடுகள் அழிந்து விட்டது. அது மட்டும் அல்லாமல் பருவ
நிலை மாற்றம் காரணமாக மழை பொழிவும் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால்
வன உயிரினங்களின் வழ்வாதாரமான உணவு மற்றும் நீர்வளம் குறைந்து விட்டதால் வன உயிரினங்கள்
அதை தேடி விளை நிலங்களுக்கு வர ஆரம்பித்து விட்டது.இதை தடுக்க மக்கள் மின் வேளி அமைத்தல்,அகழிகள்
வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் வன உயிரினங்கள் அழிந்து வருகிறது. இதனால் ஒரு
சில உயிர்கள் வருங்காலங்களில் இல்லாமல் போகும் அபாயம் எற்படும். இதை பேணிக்காப்பது
நமது முக்கியமான கடமை ஆகும்.
No comments:
Post a Comment