Thursday, 28 February 2013


வனம் காப்போம்

          மனித இனம் வாழ வனம் அடிப்படை தேவை.வனம் செழித்தால் நாடும்,மக்களின் வாழ்வும் செழிப்புரும்.நம் நாட்டிற்கு தேவையான வனம் 30 சதம்,ஆனால் இருப்பதோ 7 சதம் தான். தேவையான மரங்கள் 54கோடிக்கு மேல் இப்படியிருக்க, இருப்பதும் வனக்கொள்ளையால் பறிபோவது மனதை வதைக்கிறது.
                                
         உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு பகுதிகளில் மேற்குதொடர்சி மலைகளும் ஒன்றாகும்.இதில் 5000 வகை  பூக்கும் தாவரங்களும்,139 வகை பாலுட்டிகளும்,508 வகை பறவைகளும் 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.இம் மலைதொட்ர் மராட்டியம்,குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் வழியாக சென்று கன்னியாகுமாரியில் முடிகிறது.பரப்பள்வு 60,000 ச.கி.மீ.சுமார் 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகள் தனிதன்மை வாய்ந்த புவியல் அமைப்பாகும்.கோதவாரி,கிருஷ்ணா,காவிரி  மற்றும் பல சிறு ஆறுகளின் பிறப்பிடமாகும்.
            மேற்கு மலைதொடாரின் வளமான பகுதி சத்தியமங்களதின் வனபகுதியாகும்.இதில் புலி,யானை உள்ளிட்ட அபூர்வ வகை மான்னினங்கள் வசிக்கின்றன.முக்கியமாக நம்க்கு ஆக்சிஜன் தொழிற்சாலையாக்வும் உள்ளது.  இவ் வனமானது தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதை எதிர்த்து சிலர் போரட்டங்கள் முற்படுகின்றன மேலும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றன, அவற்றைத் தடுத்து நாம் நம் வனத்தையும் வனவிலங்குகளையும் காப்போம் என உறுதிகொள்வோம்...

”வனவளமே நிலையான வளம்”

Friday, 22 February 2013

வன உயிர்களை அழித்தல்



வன உயிர்களை அழித்தல்


     வன உயிர் என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து தாவரங்கள்,  விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மனிதனின் நன்மைக்காகக் காட்டுத் தாவரம் மற்றும் விலங்கினங்களை அழித்து விடுகிறார்கள்.இது உலகம் முழுவதும் பலமுறை நடந்துள்ளது. இது சுற்றுப்புறத்திற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
    
      வன உயிர்களை அனைத்து சூழ்நிலை மண்டலங்களிலும் காணலாம். பாலைவனங்கள், மழைக்காடுகள், சமவெளிகள் போன்ற இடங்களில் மட்டுமன்றி மிகவும் வளர்ச்சியுற்ற நகர்ப்புறங்களில் கூடத் தனித்துவமான வன உயிர் வடிவங்கள் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் வன உயிர்கள் மனித நடவடிக்கைகளால் தாக்கப்படுகின்றன.

  
 

  காட்டுயிர்களைச் அழிப்பது என்பது பலஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் வெளியேறிய காலத்தில் இருந்தே மனிதனின் குணவியல்பாக இருந்துவருகிறது. உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களின் அழிவு விகிதம் கடந்த சில நூறு ஆண்டுகளாக மிகவும் அதிகமாக இருக்கிறது. தாவரங்களை விட விலங்குகளே அதிகம் அழிகின்றன.


     

      வன உயிரினங்கள் இப்பொழுதும் அழிந்து கொண்டு வருகிறது. அதற்கு காரணம் வன வாழ்விடங்களான அதாவது காடுகள் அழிந்து விட்டது. அது மட்டும் அல்லாமல் பருவ நிலை மாற்றம் காரணமாக மழை பொழிவும் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வன உயிரினங்களின் வழ்வாதாரமான உணவு மற்றும் நீர்வளம் குறைந்து விட்டதால் வன உயிரினங்கள் அதை தேடி விளை நிலங்களுக்கு வர ஆரம்பித்து விட்டது.இதை தடுக்க மக்கள் மின் வேளி அமைத்தல்,அகழிகள் வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் வன உயிரினங்கள் அழிந்து வருகிறது. இதனால் ஒரு சில உயிர்கள் வருங்காலங்களில் இல்லாமல் போகும் அபாயம் எற்படும். இதை பேணிக்காப்பது நமது முக்கியமான கடமை ஆகும்.










Wednesday, 20 February 2013

அலையாத்திக் காடு


அலையாத்திக் காடு


அலையாத்திக் காடு (அல்லது சதுப்பு நிலக் காடு) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்திக் காடுகள் எனப்படுபவை இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இக்காடுகள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.


வேறு பெயர்கள்
·         ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.
·         இக்காடுகளுக்கு வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.
·         முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.
இந்தியாவில் அலையாத்திக் காடுகள்
கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.
மேலும் குசராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.